தமிழகம்

அதிர்ச்சி!! டிராஃபிக் ராமசாமி மரணம்.. 87 வயதில் இன்று சென்னையில் காலமானார்!!

Summary:

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நல குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நல குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒருவர் டிராஃபிக் ராமசாமி. பிரபலமான அரசியல் தலைவர்கள் தொடங்கி, பெரிய பெரிய அதிகாரிகள் வரை சிம்ம செப்பமானாக விளங்கியவர் டிராஃபிக் ராமசாமி. 87 வயதாகும் டிராஃபிக் ராமசாமி, தனது ஆரம்ப காலத்தில் தானாக முன்வந்து சென்னை பாரிமுனை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீசாருக்கு உதவிகளைச் செய்து வந்தார்.

இவரது இந்த உதவி அந்த பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க மிகவும் உதவியது. அன்றில் இருந்து இன்றுவரை தமிழக மக்களால் டிராஃபிக் ராமசாமி என அன்புடன் அழைக்கப்பட்டுவருகிறார் டிராஃபிக் ராமசாமி.

வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், வீட்டிலையே சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இவரது உடல்நிலை மிக மோசமடைந்ததை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் டிராஃபிக் ராமசாமி தனது 87 வயதில் இன்று காலமானார். டிராஃபிக் ராமசாமியின் மறைவுக்கு பொதுமக்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement