87 வயதில் மரணம்!! யார் இந்த டிராபிக் ராமசாமி?? அவர் பிரபலமானது எப்படி தெரியுமா??

87 வயதில் மரணம்!! யார் இந்த டிராபிக் ராமசாமி?? அவர் பிரபலமானது எப்படி தெரியுமா??



traffic-ramasamy-history

பிரபல சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமியின் மறைவுக்கு திரைபிரபலங்கள் முதல் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

டிராபிக் ராமசாமி பிறப்பு: ஏப்ரல் 1, 1934. ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.

பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடி அதன் பல வெற்றிகளையும் கண்டுள்ளார் டிராபிக் ராமசாமி.

Traffic Ramasamy

இவரது முறையான கல்வி பன்னிரெண்டாம் வகுப்புடன் முடிந்தது. பின்னர் பிரிட்டிஷ் இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் AMIE பட்டம் பெற்றார். ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரி முனையின் முன்னால் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்துவதில் போக்குவரத்து போலீசாருக்கு உதவி செய்தார். அவர் செய்த உதவி மூலம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்தது. ஆகவே காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் ”டிராஃபிக் ராமசாமி” என்று அழைக்கப்படுகிறார்.

டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே.

முறையான அனுமதி இல்லாமல் அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். இப்படி பல்வேறு சமூக உதவிகளை செய்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர் இன்று (04-05-2021) உடல்நல குறைவால் தனது 87 வது வயதில் மரணமடைந்தார்.