பிரதமர் மோடி வருகையால் சென்னையில் நாளை 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்.! முழு விவரம்.!

பிரதமர் மோடி வருகையால் சென்னையில் நாளை 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்.! முழு விவரம்.!


traffic-diversions-for-modi-arrival

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக நாளை சென்னை வருகிறார். இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை காலை சென்னை வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார். பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய வழித்தடங்களில் நாளை காலை முதல் மதியம் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி 14.02.2021 அன்று காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.

modi

மோடி சென்னை வருகையையடுத்து, கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் ஜங்க்ஷன், பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அண்ணாசாலையிலிருந்து இராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக செல்லலாம் எனவும். சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.