அரசியல் தமிழகம்

ஒளி பரவட்டும்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு..

Summary:

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்  ஒதுக்கப்பட்டிருப்பதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்  ஒதுக்கப்பட்டிருப்பதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும்நிலையில் தற்போதலில் இருந்தே அனைத்து கட்சிகளும் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டது. இந்த வரிசையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் சார்பாக நடிகர் கமல் ஹாசனும் மக்களை சந்தித்து பேசிவருகிறார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்திலும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், "மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement