தமிழகம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது.? இன்று நடக்கும் முக்கிய ஆலோசனை.!

Summary:

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது.? விரைவில் அறிவிப்பு.! இன்று நடக்கும் முக்கிய ஆலோசனை.!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு உள்ளிட்டவைகளை எப்போது நடத்துவது? என்பது குறித்து சென்னையில் இன்று அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளை நடத்தாமல் உள்ளது. 2019ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்ற வந்தன.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு தேர்வுகளின் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement