#Breaking குரூப் 4 தேர்வு முறைகேடு! அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!

#Breaking குரூப் 4 தேர்வு முறைகேடு! அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!



Tnpsc issue punishment

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு கடந்த 01.09.2019 தேதி அன்று நடத்தப்பட்டது. அதில்  16,29,865 தேர்வர்கள் தேர்வு எழுதினர். விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டு 24,260 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.


இதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாக தெரிவாகியுள்ளதாக செய்தி வெளிவந்தது.

tnpsc

இதுதொடர்பாக தேர்வர்கள் பலர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகுதிநீக்கம் செய்தனர். ராமேஸ்வரம் ,கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு செய்ததை உறுதி செய்தது டிஎன்பிஎஸ்சி.மேலும் ராமேஸ்வரம் , கீழக்கரை தேர்வு மையங்களில் தவிர வேறு எந்த இடங்களிலும் தவறு நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு மையங்களில் தேர்வு அதிகாரிகளாக இருந்த இரண்டு வட்டாட்சியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.