ஷாக் நியூஷ்! மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. பட்ஜெட்டில் முதல்வர் விஜய் வைக்கப்போகும் செக்..! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கான நிதி ஏற்பாடுகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
நிதி ஆதாரங்களை ஆய்வு செய்ய உத்தரவு
மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை கண்டறியும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த முறை தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இடம்பெறலாம் என்ற தகவல்கள் பரவின.
இதையும் படிங்க: இன்ப அதிர்ச்சி! திடீரென அக்கவுண்ட்டில் விழுந்த ரூ.1000.....செம ஹாப்பியில் பெண்கள்...!!!
நிதிச்சுமையால் தாமதமாகும் வாய்ப்பு
ஆனால், மாநிலத்தின் தற்போதைய நிதிச்சுமையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டிலேயே தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது சாத்தியமா என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உடனடி அறிவிப்புக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு?
தலைமைச் செயலக வட்டாரத் தகவலின்படி, நிதி நிலை சீராகிய பிறகு அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அரசு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.