இன்ப அதிர்ச்சி! திடீரென அக்கவுண்ட்டில் விழுந்த ரூ.1000.....செம ஹாப்பியில் பெண்கள்...!!!



magalir-urimai-thogai-new-beneficiaries-may-payment

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக மேல்முறையீடு செய்து நீண்ட நாட்களாகக் காத்திருந்த பெண்களுக்கு, மே மாதத்திற்கான ரூ.1,000 உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி தொகை வரவு செய்யப்பட்டதால் பல பெண்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முன்னதாக தொழில்நுட்பக் காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்த பலரும் தற்போது புதிய பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!

1.31 கோடி பெண்கள் பயன்

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 1.31 கோடி பெண்கள் பயன்பெற்று வந்தனர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் திட்டம் தொடருமா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே இருந்த நிலையில், மே மாதத் தொகை வழக்கம்போல வழங்கப்பட்டிருப்பது அந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ரூ.2,500 உயர்வு எப்போது?

தேர்தல் வாக்குறுதிப்படி உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதாக தற்போதைய அரசு அறிவித்திருந்தது. ஆனால் திட்டத்தை முழுமையாக மறுசீரமைக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக முதல்வர் விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனால் உடனடி அமல்படுத்தலில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நிர்வாக மாற்றங்கள் நிறைவடைந்த பிறகு உயர்த்தப்பட்ட தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பயனாளிகளில் மகிழ்ச்சி

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது இணைக்கப்பட்ட பெண்கள் பலரும், இந்த உதவித்தொகை தங்களின் குடும்பச் செலவுகளுக்கு பெரிய ஆதரவாக இருப்பதாகக் கூறியுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் அரசின் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும், தகுதியிருந்தும் இதுவரை விடுபட்டுள்ள பிற பெண்களுக்கும் அடுத்த கட்டமாக உதவித்தொகை வழங்கப்படும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது.

 

இதையும் படிங்க: இனி இவர்களுக்கு கிடைக்காது... மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மறுசீரமைப்பில் மாற்றம்!!!