அக்காவின் கணவருடன் அந்த உறவு.. வருங்கால கணவருக்கு நேர்ந்த கதி!
ஜார்க்கண்ட் அருகே உள்ள ஜமுவா சோக் பகுதியை சேர்ந்த நீரஜ் என்று இளைஞருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஊர்மிளா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர். ஆனால், இந்த திருமணத்தில் ஊர்மிளாவுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
அதற்குக் காரணம் ஊர்மிளா தனது அக்காவின் கணவர் சுபாஷ் என்பருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால், தனக்கு திருமணம் நடந்தால், தனது அக்கா கணவருடனான தகாத உறவை தொடர முடியாது மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தனது கள்ள காதலனுடன் சேர்ந்து, தனது வருங்கால கணவரான சுராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, தனது வருங்கால கணவருக்கு பரிசு கொடுப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி யாரும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு தனியாக வரவழைத்துள்ளார். இதனை உண்மை என நம்பி அங்கு சென்ற நீரஜை, ஊர்மிளாவும், சுபாஷீம் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவன்.. தடையமே இல்லாமல் முடித்த மனைவி!
இதனிடையே நீரஜின் குடும்பத்தினர் தனது மகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு மேற்கொண்ட போலீசார் நீரஜின் செல்போனை வைத்து விசாரணை செய்ததில் ஊர்மிளா மற்றும் அவரது கள்ள காதலன் சுபாஷ் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கொலையாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்..
இதையும் படிங்க: மருமகள் மர்ம மரணம்... 10 வயது மகன் கூறிய தகவலால் திடீர் திருப்பம்!