இனி இவர்களுக்கு கிடைக்காது... மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மறுசீரமைப்பில் மாற்றம்!!!



magalir-urimai-thogai-scheme-continues-under-vijay-gove

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் புதிய ஆட்சியிலும் தொடரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மே 2026 மாதத்திற்கான உரிமைத் தொகையை வழக்கம்போல் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மறுசீரமைப்புக்கு இடையே தொடரும் திட்டம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள அரசுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் 1,000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி.... CM பதவியேற்றதும் விஜய் போடும் முதல் கையெழுத்து..... ஆரம்பவே அமர்களமாகும் அரசியல்!!!

தேர்தல் பிரசாரத்தின் போது உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போதைக்கு பழைய தொகையே தொடரும் நிலையில், புதிய மாற்றங்கள் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தகுதியற்றவர்கள் பட்டியலில் இருந்ததாக புகார்

கடந்த ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பலரும் பயன்பெற்றதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல வீடுகள் மற்றும் அதிக சொத்துக்கள் வைத்திருந்தும், அரசியல் செல்வாக்கின் மூலம் சிலர் உரிமைத் தொகையைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதனால் உண்மையில் உதவி தேவைப்படும் ஏழை பெண்களுக்கு திட்டத்தின் பலன் முழுமையாகச் செல்லவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

ஏழைப் பெண்களுக்கு முன்னுரிமை தர கோரிக்கை

அதே நேரத்தில், கணவனை இழந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் பெறும் குறைந்த அளவிலான ஓய்வூதியத்தை காரணம் காட்டி, வாடகை வீட்டில் வசிக்கும் பல ஏழைப் பெண்களுக்கு இந்த உதவி மறுக்கப்பட்டதாகவும் புகார்கள் இருந்தன. எனவே, புதிய அரசின் மறுசீரமைப்பில் தகுதியற்றவர்களை நீக்கி, உண்மையில் உதவி தேவைப்படும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறிப்பாக சொந்த வீடு இல்லாமல் வாழும் ஏழை குடும்பங்களை அடையாளம் கண்டு, விஜய் அரசு இந்தத் திட்டத்தை சரியான பயனாளிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!