தேர்வுத்துறை அறிவிப்பு...தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு.!

தேர்வுத்துறை அறிவிப்பு...தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு.!


TN government announce 10th12th revision timetable

தமிழகத்தில் கொரோனா 3 ஆம் அலை வேகமாக பரவியதை அடுத்து கடந்த மாதம் மீண்டும் பள்ளி,கல்லூரிகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கையும் அறிவித்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஊரடங்கை கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் விலக்க தமிழக அரசு உத்தரவு வழங்கியது.

மேலும் பிப்ரவரி 1 முதல் பள்ளி,கல்லூரிகளை திறக்கவும் உத்தரவு பிறப்பித்தது. இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி நடக்கவிருந்த முதல் திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது புதிய திருத்தப்பட்ட திருப்புதல்  அட்டவணையை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது.

Tn government

அதன்படி தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதேபோல் 12 ஆம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.