பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; அதிரடியாக பறந்த உத்தரவு..!



TN DGP Office order to SP and IG Offices on 14 Feb 2025 

 

சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக இருந்த மகேஷ் குமார், தன்னுடன் பணியாற்றி வந்த பெண் காவலர்கள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் தமிழ்நாடு டிஜிபி மற்றும், சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் விசாரணை நடந்தது.

கணவருக்கு ஆதரவாக மனைவி

விசாகா கமிட்டி அமைத்து நடந்த விசாரணையில், மகேஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவரின் மனைவியான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, கணவரை மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை திட்டம்; நல்ல செய்தி சொன்ன துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.!

பெண் மீது குற்றசாட்டு

மேலும், கணவருக்கும் - புகார் கொடுத்த பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருந்தது. அதனை நான் ஏற்கனவே அறிந்து இருந்தேன். பெண் தற்போது புதிய வீடு ஒன்று காட்டிவரும் நிலையில், அதற்கு கணவரிடம் இருந்து பணம் கேட்டு மிரட்டல் நடந்தது. அதற்கு கணவர் ஒப்புக்கொள்ளாததால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

கூடுதலாக எங்களின் திருமண நாள் அன்றே அவரின் பணியிடைநீக்கம் தொடர்பான அறிவிப்பும் வந்துள்ளது. இது மிகக்கொடுமையானது என தெரிவித்தார். புகார் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, டிஜிபி அலுவலகத்தில் இருந்து எஸ்.பி., டி.எஸ்.பி., ஐஜி உட்பட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாய்மொழி உத்தரவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவலில், காவல் உயர் அதிகாரிகளின் உதவியாளர்களாக பெண் அதிகாரிகளை நியமிக்க வேண்டாம். அப்பணியில் இருப்போரை உடனடியாக வேறு பணிக்கு மாற்றி உத்தரவிடுங்கள் என தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: இராமநாதபுரம்: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 3 பேர் பலி..!