மகளிர் உரிமைத்தொகை திட்டம்; நல்ல செய்தி சொன்ன துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருமண தம்பதிகளுக்கு தாலி, சீர்வரிசை போன்றவை அரசின் சார்பில் மணமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு உட்பட பலரும் இருந்தனர்.
இதையும் படிங்க: முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.!
திட்டம் விரிவாக்கம் அறிவிப்பு
நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். 3 மாதத்தில் பல மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது வரை 1.15 கோடி மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கபடுகிறது" என தெரிவித்தார். இதனால் மகளிர் உரிமைத்தொகை மேலும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: துணை முதல்வரின் மகனுக்கு இடம் கொடுத்ததாக சர்ச்சை.. சமூக வலைத்தளங்களில் தொடரும் வாதம்.!