BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடந்த இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: துணை முதல்வரின் மகனுக்கு இடம் கொடுத்ததாக சர்ச்சை.. சமூக வலைத்தளங்களில் தொடரும் வாதம்.!

முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் இருந்த மக்களிடையே பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என 2 முறை அடுத்தடுத்து பேசினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "பெண்களுக்கான மேம்பாடு, சுயஉதவி குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் என தமிழ்நாட்டின் பெண்களுக்காக பாடுபடுபவர் தமிழ்நாடு முதல்வர் உதயநிதி ஸ்டாலின். சுமார் 1.17 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. அந்த திட்டத்தை செயல்படுத்தி காண்பித்தவர் முதல்வர் உதயநிதி ஸ்டாலின்" என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "ஆளுநருக்கு சட்டப்பேரவையில் வாக்கிங் செல்வது தான் ஒரே வேலை" - துணை முதல்வர் உதயநிதி கலாய்.!