தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
காலியாகிறது தமிழ்நாடு பாஜக கூட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தடபுடலாக அதிமுகவில் இணைவு..!

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஊடகத்துறை பிரிவு தலைவர் நிர்மல் குமார், அக்கட்சியில் இருந்து தன்னை விலக்கி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்துகொண்டார்.
அவர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து இருந்தார். இந்த நிலையில், இன்று அக்கட்சியின் ஊடகத்துறை மாநில செயலாளர் திலீப் கண்ணன்.
முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி மாவட்ட துணைத்தலைவர் விஜய், ஓ.பி.சி அணி மாநில செயலாளர் ஜோதி உட்பட பலரும் அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைந்துகொண்டுள்ளனர். இதனால் பாஜக தலைமை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
மாண்புமிகு கழக இடைக்காலப் பொது செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களை, அவரது இல்லத்தில் இன்று, @CTR_Nirmalkumar அவர்களுடைய ஏற்பாட்டின்பேரில், கிருஷ்ணன், திலிப்கண்ணன், ஜோதி, விஜய் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். pic.twitter.com/vNMg7WouD6
— AIADMK (@AIADMKOfficial) March 7, 2023