போக்குவரத்து காவலர்கள் பஞ்சத்தால்.,? போக்குவரத்தை சீர்படுத்தும் ஆட்டோ ஓட்டுனர்கள்..!

போக்குவரத்து காவலர்கள் பஞ்சத்தால்.,? போக்குவரத்தை சீர்படுத்தும் ஆட்டோ ஓட்டுனர்கள்..!


Tiruppur Palladam Traffic Issue Auto Drivers Turned Help Peoples Like Traffic Police

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் நகரில் தினமும் பேருந்து, லாரி, பனியன் நிறுவன வாகனங்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இதனால் பல்லடம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக பரபரப்புடன் காணப்படும். 

அங்குள்ள வீரபாண்டி பிரிவு, டி.கே.டி மில் நிறுத்தம், காணப்பகுதிபாளையம் - பொங்கலூர் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. போக்குவரத்து சிக்னலும் செயல்படாத நிலையில், அவ்வப்போது விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. 

Tiruppur

போக்குவரத்து காவல் துறையினரும் சம்பவ இடத்தில் பணியில் இருப்பது கிடையாது என்பதால், அப்பகுதியில் ஆட்டோ இயக்கி வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் போக்குவரத்தை சீர்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.