தாராபுரம்: தறிகெட்டு இயங்கிய கார், சாலைத்தடுப்பில் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பலி.!



Tiruppur Dharapuram Near NH Car Accident Hit Centre Median 3 Died

ஒட்டன்சத்திரம் புறவழிசலையில் ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் இருந்து, கோயம்புத்தூர் நோக்கி வேளாண் கல்வித்துறை மையத்திற்கு கார் சென்றுகொண்டு இருந்தது. இந்த கார் தாராபுரம், சாலக்கடை பகுதியில் பயணம் செய்கையில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. 

Tiruppur

கார் சாலைத்தடுப்பின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த நாகராஜ் (வயது 23), பிரேமலதா (வயது 43) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம் (வயது 61), தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

Tiruppur

அதனைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த சுமித்ரா (வயது 19) என்ற இளம்பெண், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மூலனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.