ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!
பட்டப்பகலில் மூதாட்டி வீடுபுகுந்து கொலை??.. நகை, பணம் கொள்ளை.. அதிரவைக்கும் சம்பவம்.!
பட்டப்பகலில் மூதாட்டி வீடுபுகுந்து கொலை??.. நகை, பணம் கொள்ளை.. அதிரவைக்கும் சம்பவம்.!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்து கொலை செய்த மர்ம கும்பல், அவரின் தங்க நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி சென்றுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலாம்பாளையம், சீனிவாசா நகரில் வசித்து வருபவர் கோபால் (வயது 70). இவரின் மனைவி முத்துலட்சுமி (வயது 62). தம்பதிகளின் மகன்கள் அருண்குமார், ஜீவானந்தம். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அருண்குமார் தனது குடும்பத்தோடு இதே பகுதியில் வசித்து வருகிறார். ஜீவானந்தம் கோயம்புத்தூரில் தனது குடும்பத்தாருடன் வசிக்கிறார்.
தந்தை கோபால் தனது மகன் அருண் குமாருடன் காதர் துண்டு தயாரித்து விற்பனை செய்து வந்தார். தனக்கு சொந்தமான கட்டிடத்தில் இருக்கும் 6 வீடுகளில் 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ள கோபால், ஒரு வீட்டில் தானும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் கோபால் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்த நிலையில், மாலை 6 மணியளவில் கோபால் வீட்டிற்க்கு வந்த சமயத்தில் வீடு வெளிப்புறம் தாழிடப்பட்டு இருந்துள்ளது. கதவை திறந்து வீட்டிற்குள் செல்கையில், முத்துலட்சுமி படுக்கையறையில் பிணமாக தொங்கியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வேலாம்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முத்துலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடந்த முதற்கட்ட விசாரணையில், முத்துலட்சுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
முத்துலட்சுமியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி சங்கிலி, பீரோவில் இருந்த 30 சவரன் நகைகள், ரூ.10 இலட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் அம்பலமானது. இதனால் பணத்திற்காக மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவரவே, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது.