24 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகி இழிசெயல்..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகியின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Tirupattur News Today: 24 வயதுடைய இளம்பெண் தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வரும் நிலையில், இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த பெண்மணி தினமும் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்.
தினமும் தொல்லை:
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி (வயது 35). இவர் திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய வழக்கறிஞர் அணியின் தமிழக வெற்றிக் கழக அமைப்பாளராக இருக்கிறார். இவர் தினமும் பணிக்கு சென்றுவரும்போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வரும் சத்தியமூர்த்தி ஆபாசமாக சைகை காட்டி, தனது டூவீலரால் பெண்ணை மோதுவது போன்றும் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீடுபுகுந்து துணிகரம்.!

காவல்துறையினர் வலைவீச்சு:
நேற்று முன்தினம் பெண் வேலைக்கு சென்றபோதும், தொல்லை தொடர்ந்துள்ளது. இதனால் பெண்மணி சத்தியமூர்த்தியை கண்டித்த நிலையில், அவர் பெண்ணை கீழே தள்ள முயற்சித்து இருக்கிறார். இதனால் இந்த விஷயம் குறித்து பெண் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் தவெக நிர்வாகியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நல்லவன் போல பேசி கொடுமை.. பள்ளி மாணவிக்கு வீடுபுகுந்து தொல்லை.. திடுக்கிடவைக்கும் பயங்கரம்.!