நடத்துனர்களுக்கு மாதவிடாய் விடுப்பு... அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு.!



kerala-high-court-asks-government-to-consider-menstrual

கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பெண் நடத்துனர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பெண் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பணிச்சூழலை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமும் 8 முதல் 16 மணி நேரம் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருப்பதால், தேவையான நேரத்தில் கழிவறையை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Kerala high court

இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் மூன்று பெண் நடத்துனர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை விசாரித்த நீதிமன்றம், பெண்களின் பணிச்சூழல் மற்றும் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! மீண்டும் மீண்டும் வங்கி கணக்கில் 1000+ 2,500+ 5000.....முதல்வர் ஸ்டாலினின் சர்ப்ரைஸ் கிப்ட்!!!

பெண் நடத்துனர்களின் உடல்நலத் தேவைகள், மனஅழுத்தம் மற்றும் பணியின் தன்மை உள்ளிட்ட அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து, ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தாஜ் மஹால் பொய்யா.? 'தேஜோ மஹாலயா' என்ற சிவன் கோவில் தானா.?! உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.!