17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீடுபுகுந்து துணிகரம்.!



43-Year-Old Man Arrested for Sexually Assaulting 17-Year-Old Mentally Challenged Girl in Tirupattur

சிறுமிக்கு 43 வயதுடைய நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, துத்திப்பட்டு புதுமனை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 43). இவர் துத்திப்பட்டு பகுதியில் சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தி வந்தார். இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே திடீரென மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர், எப்போதும் போதையில் திரிந்து வந்துள்ளார். 

Crime

சிறுமிக்கு பாலியல் தொல்லை:

இந்நிலையில், வெங்கடேசன் சம்பவத்தன்று ஆம்பூர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த 17 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் வெங்கடேசனை பிடித்து அடித்து நொறுக்கினர். பின் உமரபாத் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

Crime

குடிபோதைக்கு அடிமை:

நேரில் வந்த அதிகாரிகள், வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் நடத்தி வந்தவர், திடீரென குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார். பின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வழக்கில் சிக்கி இருக்கிறார் என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.