தம்பி இது ரத்த பூமி.. திருப்பத்தூரில் குடிநீர் குழாயில் விநியோகம் செய்யப்பட்ட சிவந்த சாக்கடை நீர்.!

தம்பி இது ரத்த பூமி.. திருப்பத்தூரில் குடிநீர் குழாயில் விநியோகம் செய்யப்பட்ட சிவந்த சாக்கடை நீர்.!tirupattur Drinking Water Line Blood

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 25 ஆவது வார்டுகளில் உள்ள சின்ன மதர் நகர், சின்னக்கடை தெரு, சி.கே.சி தெரு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். நேற்று காலை இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், குடிநீர் குழாயில் இருந்து இரத்த நிறத்தில் சிவந்த நிற தண்ணீர் வந்துள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே, நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பாதாள சாக்கடை அடைப்பு, மாட்டிறைச்சி கழிவு போன்றவை கலந்து குடிநீர் குழாயில் வந்தது அம்பலமானது. 

இதனையடுத்து, தற்காலிகமாக பாதிப்பை சரி செய்த அதிகாரிகள், அதனை நிரந்தரமாக சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் வடிவேலு காமெடியில் கூறுவதை போல, இது ரத்த பூமி தம்பி என்பதை உறுதி செய்துள்ளதாக அலட்சிய அதிகாரிகளின் போக்குக்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.