#தமிழகமே அதிர்ச்சி..! 22 வயது இளம்பெண் துள்ளத்துடிக்க கற்பழித்து கொலை.. ஒருதலை காதலை ஏற்காததால் வெறிச்செயல்.. திருப்பத்தூரில் பரபரப்பு.!

#தமிழகமே அதிர்ச்சி..! 22 வயது இளம்பெண் துள்ளத்துடிக்க கற்பழித்து கொலை.. ஒருதலை காதலை ஏற்காததால் வெறிச்செயல்.. திருப்பத்தூரில் பரபரப்பு.!


Tirupattur 22 Aged Girl Sexual abused and Killed by One Side Drama Lover

இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த காம கொடூரன் ஒருதலைக்காதல் என்ற பெயரில் நடத்திய பெரும் கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டி, செல்ரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்தோஷ் பிரியா (வயது 22). இவரின் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே இயற்கையை எய்திவிட்டனர். இதனால் பிரியா தாத்தா சீனன் என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். பி.எஸ்.சி படித்துள்ள பிரியா, தமிழக அரசின் வேலைக்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதியில் இருந்து சந்தோஷ் பிரியா வீட்டில் இருந்து மாயமாகவே, அவர் மறுநாளில் அங்குள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கந்திலி காவல் துறையினர், சந்தோஷ் பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tirupattur

File Picture

முதலில் தற்கொலை என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் சந்தோஷ் பிரியா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, சந்தோஷ் பிரியாவின் மாயமான செல்போன் ஐ.எம்.இ.ஐ நம்பர் வைத்து விசாரணை நடத்துகையில், கடந்த சில நாட்களாக ஸ்விச் ஆப் ஆகியிருந்த செல்போன், 4 நாட்களுக்கு முன்னர் ஆன் செய்யப்பட்டுள்ளது. 

இந்த செல்போனை திருப்பத்தூர் கோட்டை தெருவை சேர்ந்த இளைஞர் உபயோகம் செய்வது உறுதியாகவே, அவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சந்தோஷ் பிரியாவின் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மகேந்திரன் (வயது 21) ரூ.5 ஆயிரத்திற்கு செல்போனை விற்பனை செய்தது அம்பலமானது. இதனையடுத்து, மகேந்திரனை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில், சந்தோஷ் பிரியா மகேந்திரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் அம்பலமானது. இதுகுறித்து காம கொடூரன் அளித்துள்ள வாக்குமூலமாவது, "அண்டை வீட்டில் வசித்து வந்த சந்தோஷ் பிரியாவை நான் ஒருதலையாக காதலித்தேன். அவரிடம் எனது காதலையும் தெரிவித்தேன். 

Tirupattur

அவரோ எனது காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் பலமுறை அவரிடம் விதவிதமாக காதலிக்க வற்புறுத்தியும் பலனில்லை. அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவரின் மீது எனக்கு தீராத ஏக்கம் இருந்தது. இந்த சூழலில், கடந்த ஜூலை 22 ஆம் தேதி அவர் தெருவில் தனியே நடந்து வந்தார். நான் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில், அவரிடம் வீட்டில் இறக்கி விடுவதாக பைக்கில் ஏற்றினேன். 

அப்போதும் காதலிக்க வற்புறுத்தவே, அவர் எனது வாகனத்தில் ஏற மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும், வேறொருவரை காதலிப்பதாகவும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் சந்தோஷ் பிரியாவை சரமாரியாக தாக்கி, அருகேயுள்ள கம்பங்கொல்லையில் வைத்து பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை கிணற்றில் வீசிவிட்டு சென்றேன். இப்போது சிக்கிக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளான்.