இடத்தகராறில் 63 வயது மூதாட்டியை அடித்துக்கொன்ற 60 வயது முதியவர்; கடைசி காலத்தில் துள்ளத்துடிக்க நடந்த சோகம்.!

இடத்தகராறில் 63 வயது மூதாட்டியை அடித்துக்கொன்ற 60 வயது முதியவர்; கடைசி காலத்தில் துள்ளத்துடிக்க நடந்த சோகம்.!


Tirunelveli Thevarkulam Village Near Old Lady Killed Over Land Dispute 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவர்குளம், வன்னிக்கோனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரின் மனைவி வள்ளித்தாய் (வயது 63). தம்பதிகளின் மகன் தமிழ்செல்வம், சென்னையில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அண்ணாதுரை உயிரிழந்துவிடவே, வள்ளித்தாய் கூவச்சிப்பாட்டி சாலையில் உள்ள வடக்கு தெரு வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். நேற்று அவர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தேவர்குளம் காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் இறப்பதற்கு முன்பு அக்கம் பக்கத்தினரிடம் நன்றாக பேசி வந்ததால், சந்தேக மரணம் என வழக்குபதியப்பட்டது..

அவரின் தலை உட்பட உடலில் காயமும் இருக்கவே, அதிரடி விசாரணையில் இறங்கியபோது மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த செங்கையா (வயது 60), வள்ளித்தாயை கொலை செய்தது உறுதியானது.

இந்த விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளாக இருதரப்பிடையே இருந்த இடத்தகராறில், செங்கையா வள்ளித்தாயை உலக்கையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், செங்கையாவை அதிகாரிகள் கைது செய்தனர்.