ஜல்ஸாக்கு நான் வேணும், கல்யாணத்துக்கு மறுப்பா?.. 45 வயது கள்ளக்காதலி நடுரோட்டில் பயங்கர சம்பவம்..!



Tirunelveli Native Woman Suicide Tiruppur due to Affair Person Avoid Marriage

கள்ளக்காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்த காரணத்தால், பெண்மணி அவரது வீட்டு முன்னரே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவர் தெய்வானை (வயது 45). இவரது கணவர், கடந்த 15 வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் திருநெல்வேலியில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மகளுக்கு திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகிறார். 

தெய்வானை பணிக்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில், வாடகை வீட்டில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வாலிபருடன் தெய்வானைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

Tiruppur

இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது நெருங்கி பழகி வந்துள்ளனர். தெய்வானை தன்னை திருமணம் செய்துகொள்ள கள்ளக்காதலனை வற்புறுத்திய நிலையில், அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து இருக்கிறார். 

இதனால் பெரும் ஏமாற்றமடைந்த தெய்வானை, திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று மதியம் தெய்வானை கள்ளக்காதலன் வீட்டு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். 

Tiruppur

உடலில் தீப்பற்றி எரிந்ததுடன் அங்கும் இங்கும் ஓடி வலியால் பெண்மணி அலறவே, பொதுமக்கள் தெய்வானை உடலில் எரிந்த தீயை அனைத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெய்வானை, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக திருப்பூர் மத்திய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் வெளியாகி பெண் தீக்குளித்த வீடியோ வைரலாகி வருகிறது.