கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
பால் ஊற்ற சென்ற பால்வியாபாரிக்கு பால் வார்த்த பயங்கரம்.. முன்விரோதத்தால் துள்ளத்துடிக்க படுகொலை.!
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி. இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் வீட்டிலேயே ஆடு, மாடு வளர்த்து அதன் மூலமாக வரும் பால் எடுத்து பண்ணையில் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பால் பீய்ச்சி அதனை பண்ணைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது, அவரை வழிமறித்த 3பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி முத்துப்பாண்டியை வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழக்கவே, இந்த விஷயம் தொடர்பாக சேரன்மகாதேவி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை செய்ததில், முத்துப்பாண்டியின் மகனான மாடசாமியை கடந்த 24ஆம் தேதி பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்தது தெரியவந்தது. இதனால் பழிவாங்குவதற்காக முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.