தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் தளர்வு.! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் தளர்வு.! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!


time extension for opening shops

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்த நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 

இதன்காரணமாக  நாடு முழுவதும் பல்லேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனையடுத்து பொதுமக்களின் நலன் கருதி கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை  அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அணைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் இரவு 10 மணிவரை கடைகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.