மயானங்களில் பணியாற்றுபவர்களும் முன்களப்பணியாளர்கள்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு.!Those who work in cemeteries are also forerunners

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 31 ஆயிரத்திற்கு மேலாக அதிகரித்து வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கொரோனா காலத்தில் தடுப்புப் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவத்துறை, காவல்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட சில துறைகளை அரசு முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.

cemeteries

தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால், மயானங்களில் தகனம் செய்ய உடல்கள் நீண்ட வரிசைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மயானப் பணியாளர்கள் இரவு, பகல் பாராமால் பாடுபட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு மயானங்களில் பணியாற்றுபவர்களும் முன்களப் பணியார்களாக கருதப்படுவர் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மேலும் மயான பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிச்சயம் வழங்கும் எனவும், கொரோனா காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.