தனியாருக்கு தாரை வாங்கப்படும் அரசுப்பள்ளி சீருடை தைக்கும் பணி; தாய்மார்கள் குமுறல்.!



thoothukudi women Dress Stitching Association Request 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துநகர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சீருடை தைத்து வழங்கும் சங்கங்கள் இருக்கின்றன. இதில் உறுப்பினராக பல ஆயிரம் தாய்மார்கள் இருக்கின்றனர். இவர்கள் பள்ளி மாணவ - மாணவியருக்கான சீருடைகளை தைத்து வழங்குகின்றனர். 

அரசுப்பள்ளிகளுக்கு துணி தைக்கும் பணி:

சமீபத்தில் 11 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு சீருடை தைக்கும் பணிகள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது பெண்களுக்கு அது சார்ந்த விழிப்புணர்வு இல்லை என்பதால், அதனை இழந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தற்போது ஒன்று முதல் 08 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சீருடை தைத்து வழங்கும் பணியும் தனியாருக்கு கொடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களின் கோரிக்கையை முன்வைத்து மனு அளித்தனர்.

முதல்வர் உதவி செய்ய கோரிக்கை:

இந்த பணியை நம்பி அப்பகுதியில் பல ஆயிரம் குடும்பங்கள் இருப்பதாகவும், தனியாருக்கு இப்பணிகள் தாரை வார்க்கப்பட்டால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என கோரிக்கை வைத்துள்ள பெண்கள், பெண்களுக்கான முன்னேற்றப்பாதையை வழிவகுத்து தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்ததுள்ளனர்.