செல்போனால் நேர்ந்த கொடூரம்.! தம்பினு கூட பார்க்காமல் அண்ணனின் வெறிசெயல்!!Young man killed his brother for mobile

ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவர்கள் பசவராஜ் மற்றும் சன்னம்மா தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 18 வயதில் சிவகுமார் என்ற மகனும், 13 வயதில் பிரானேஷ் என்ற மகனும் உள்ளனர். சிவகுமார் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பெற்றோருடன் வேலை பார்த்து வருகிறார். 

சடலமாக கிடந்த தம்பி 

பிரானேஷ் அவரது பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் 7 ஆம்வகுப்பு படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பிரானேஷ் பெற்றோருடன் வந்து தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் அண்மையில் தலை மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களுக்கு பிரானேசின் சகோதரர் சிவக்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனைவிக்காக போட்ட ஸ்கெட்ச்.! மாமனார் உள்ளே நுழைந்ததால் நேர்ந்த கொடூரம்.! பகீர் சம்பவம்!!

mobile

செல்போனால் பிரச்சினை 

பின் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சிவகுமாருக்கு செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் சிவக்குமார் போனை பிரானேஷ் வாங்கி விளையாடியுள்ளார். சிவகுமார் செல்போனை கேட்டும் அவர் கொடுக்காமல் வைத்துக் கொண்டுள்ளார்.

போலீசார் விசாரணை 

 இந்த நிலையில் கோபமடைந்த அவர் பிரானேஷை கொல்ல திட்டமிட்டுள்ளார். பிரானேஷை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, தான் கொண்டு சென்ற சுத்தியலால் அவரது தலை மற்றும் வயிற்றில் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் ஏற்பட்டு பிரானேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனை தொடர்ந்து போலீசார் சிவகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் காதலி கண்முன்னே துள்ளத்துடிக்க இளைஞருக்கு கொடூரம்.. சென்னையில் பயங்கரம்.!