அட.. அஜித்தின் லுக்கே வேறமாதிரி இருக்கே.! "குட் பேட் அக்லி" ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த மாஸ் போஸ்டர்!!good-bad-ugly-movie-poster-released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் "குட் பேட் அக்லி". அஜித்தின் 63வது படமான இந்த திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். 

அஜித்தின் குட் பேட் அக்லி 

குட்பேட் அக்லி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இன்று மாலை படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் அதனை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். 

இதையும் படிங்க: தல அஜித் பிறந்தநாளில், குட் பேட் அக்லீ படத்தின் தயாரிப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து.!

வெளிவந்த போஸ்டர் 

அதன்படி அஜித்தின் மாஸ் லுக்  போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் படம் பொங்கல் 2025 ரிலீசாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரில் அஜித் மூன்று வித்தியாசமான முக பாவனையை கொடுத்தபடி உள்ளார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Good Bad Ugly

 

 

இதையும் படிங்க: கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தில் இந்த மாஸ் நடிகரா.! லுக்கே மிரள வைக்குதே.! வெளிவந்த மாஸ் போஸ்டர்!!