2 நாட்களாக பூட்டி இருந்த வீட்டில் வீசிய துர்நாற்றம்! ஜன்னலை எட்டிப் பார்த்த பக்கத்து வீட்டுகாரர்க்கு காத்திருந்த அதிர்ச்சி... விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!



chennai-padi-couple-found-dead

சென்னை அம்பத்தூர் பாடியில், கணவன் மற்றும் மனைவி வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (41), அவரது மனைவி மாலதி (38) ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

வீட்டில் இருந்து துர்நாற்றம்: அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி

அருண்குமார், மாலதி தம்பதியினருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஏழு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கமும், நிலையான வேலைவாய்ப்பு இல்லாததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அவர்களைப் பாதித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 7 வயது சிறுமி மாயமான வழக்கில் தீடீர் திருப்பம்! கண்ணீருடன் கதறும் தாய்... ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!!!

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டின் கதவு பூட்டியிருந்ததுடன், உள்ளிருந்து கடுமையான துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அருண்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டனர். உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கணவர் தூக்கிலும், மனைவி காயங்களுடனும் சடலமாக மீட்பு

தகவலறிந்து வந்த கொரட்டூர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அருண்குமார் தூக்கில் தொங்கிய நிலையிலும், மாலதி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்திலும் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இருவரது உடல்களும் இரண்டு நாட்களுக்கும் மேலாக வீட்டில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இதையடுத்து, இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின்போது, மாலதி எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கடிதம் 

அந்தக் கடிதத்தில், குழந்தை இல்லாத ஏக்கமும் வறுமையும் தங்களது நிலைக்குக் காரணம் என மாலதி குறிப்பிட்டிருந்துள்ளார். மேலும், கணவர் தன்னைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், தங்களது உயிரிழப்புகளுக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் அதில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், கடிதத்தில் உள்ள தகவல்களின் உண்மைத் தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாலதி கொலை செய்யப்பட்டாரா, அருண்குமாரின் மரணத்துக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கொரட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் முடிவில்தான் உயிரிழப்புகளுக்கான முழுமையான காரணம் தெரியவரும்.

 

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.. பயிர்க்கடன் தள்ளுபடி..! விவசாயிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!!