அங்கன்வாடி முட்டையை உடைத்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி! அதை பார்த்து அலறித் துடித்த கொடூரம்.....!!!
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு இருந்ததாக பெற்றோர் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வேகவைத்தபோது வெளிவந்த அதிர்ச்சி
ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஒரு வயது முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரந்தோறும் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 20-ம் தேதி வழங்கப்பட்ட முட்டைகளில் ஒன்றை வீட்டில் வேகவைத்து உடைத்தபோது, அதனுள் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு இருந்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த முட்டையை அங்கன்வாடி மையத்திற்கு எடுத்துச் சென்று ஊழியரிடம் காண்பித்தபோதும், உரிய விளக்கம் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வியைத் தாங்க முடியல... திமுக வட்ட செயலாளர் ஏசுதாஸ் எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
அதிகாரிகள் நேரில் ஆய்வு
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பெற்றோரிடமும் மைய ஊழியர்களிடமும் விளக்கம் கேட்டு ஆரம்பகட்ட தகவல்களை சேகரித்ததாக கூறப்படுகிறது.
பரிசோதனைக்குப் பிறகு நடவடிக்கை
சம்பவம் தொடர்பாக அழுகிய முட்டையின் ஓடுகள் மற்றும் பிற ஆதாரங்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த முட்டை அரசு சார்பில் வழங்கப்பட்டதா அல்லது வெளியில் இருந்து வாங்கப்பட்டதா என்பது ஆய்வுக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.....! அமைச்சர் சரத்குமார் நீக்கம்? அதிகாரப்பூர்வ உறுதிபடுத்தல் என்ன?