திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்! மலையை நோக்கி குவியும் பக்தர்கள்!thiruvannamalai maha deepam

கார்த்திகை தீப திருநாளானது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருநாள் இன்று 10.12.2019 செவ்வாய்க் கிழமை கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில், பரணி தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூதங்களில் நெருப்பிற்குரிய தளமாக விளங்குவது திருவண்ணாமலை ஈஸ்வரர் கோயில்.

கார்த்திகை தீப திருநாளான்று மாலை 6 மணி அளவில் நம் வீடுகளில் நட்சத்திரங்கள் போல ஜொலிக்கும் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம். நம் வீட்டினை கோவில் போல மாற்றும் இந்த தீப திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்படும்.

thiruvannamalai

திருவண்ணாமலையின் அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்தநிலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சில நொடிகள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளுவார். 

ஒவ்வொரு வருடமும் மக தீபத்தை காண்பதற்கு திருவண்ணாமலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதனால் இவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் செய்து வருகிறது.