இப்படியெல்லாமா கட் அவுட் வைப்பாங்க.! மணமக்களின் மிக நெருக்கமான புகைப்படங்களால் கடுப்பான நீதிபதி.!

thiruvannamalai judge order to remove marriage paners


thiruvannamalai-judge-order-to-remove-marriage-paners

இன்றைய காலகட்டத்தில் பிறந்த நாள் தொடங்கி இறந்த நாள் வரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஆங்காங்கே பேனா், விளம்பர பலகைகள் மற்றும் போஸ்டர்களை ஓட்டுவதை தற்போது வழக்கமாக வைத்துள்ளனர்.

அவ்வாறு சாலை ஓரங்களில் மற்றும் போது இடங்களில் வைக்கப்படும் பேனர்களால் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துகள் போன்றவை ஏற்படுகிறது.

அதனால் நிகழ்ச்சிகளுக்கு  பேனா், விளம்பர பதாகைகளை வைப்பது தொடர்பாக நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்து சட்டம் பிறப்பித்தது .

இந்நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்காக மணமகன் மற்றும் மணமகள் புகைப்படம் போட்டு பிரம்மாண்டமான பேனர் ஒன்று சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

marriage

இந்நிலையில் அந்த வழியாக சென்ற மாவட்ட நீதிபதி புகழேந்தி சாலையில் இருந்த இந்த பேனர்களை பார்த்துவிட்டு , அதில் இருந்த புகைப்படங்கள் சிறுவா்களின் பாலுணா்வை தூண்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.

பின்னர் அங்கிருக்கும் மக்களிடம் இதுகுறித்து கேட்டபோது  அவர்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி புகழேந்தி பேனா்களை அகற்ற உத்தரவிட்டார்.

மேலும் பேனா் வைத்த நபா்கள், திருமண தம்பதியரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.