திருமண பத்திரிகையை பார்த்து அதிர்ச்சியடைந்த சொந்தக்காரர்கள்.. திருமணம் நடந்த இடம் அப்படி..

திருமண பத்திரிகையை பார்த்து அதிர்ச்சியடைந்த சொந்தக்காரர்கள்.. திருமணம் நடந்த இடம் அப்படி..


thiruvanamalai-man-marriage-event-under-sea-viral-photo

மென்பெருள் நிறுவன ஊழியர் ஒருவர் தனது திருமணத்தை ஆழ்கடலில் நடத்திய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக திருமணம் என்பது அனைவர் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. சிலர் தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தவேண்டும் எனவும், சிலர் மிக எளிமையாக நடத்தவேண்டும் என ஆசைப்படுவர். அதிலும் சிலர், தங்கள் திருமணத்தை மிகவும் வித்தியாசமான முறையில் நடத்தவேண்டும் என விருப்பப்படுவர். அப்படி மிகவும் வித்தியாசமாக நடந்த திருமணம்தான் இது.

Viral News

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் சின்னதுரை என்பவருக்கும், கோவையை சேர்ந்த ஸ்வேதா என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்துள்ளன்னர். இந்நிலையில் தனது திருமணத்தை சற்று வித்தியாசமாக, ஆழ்கடலில் நடத்த தான் ஆசை படுவதாக மாப்பிளை சின்னத்துரை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

Viral News

இதற்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து புதுச்சேரி பகுதியிலுள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் ஒருவரை மணமக்கள் அணுகி, இருவரும் சில நாட்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டனர். இதனை அடுத்து இன்று காலை இருவரும் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு சென்னை நீலாங்கரை கடற்கரையில் படகின் மூலம் கடலுக்கு அழைத்துச்செல்லப்பட்டு, ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு பின் கடலுக்கு அடியில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

Viral News

இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படம் மற்றும் திருமண பத்திரிகை போன்றவை இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.

Viral News