உறவுக்கு மறுத்த மனைவி.. மண்ணெணெய் ஊற்றி பதறவைத்த கணவன்.!

தனிமையில் இருக்க மனைவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதால், கணவர் செய்த கொடூரம் தெரியவந்துள்ளது.
தம்பதிகள்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை செம்பூர், வாசி நாகா பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் அஹ்வாத் (வயது 46). இவரின் மனைவி ரேகா (வயது 38). தம்பதிகள் இருவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: Video: கார் விபத்தில் சிக்கி சோகம்.. 5 பேர் உடல்நசுங்கி கோர மரணம்.!!
தனிமைக்கு ஆசை:
இதனிடையே கடந்த மே மாதம் 30 ஆம் தேதி தினேஷ் தனது மனைவியுடன் தனிமையில் இருக்க முயற்சித்தார். இந்த விஷயத்திற்கு ரேகா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் மனைவியை சரமாரியாக தாக்கியதோடு மட்டுமல்லாது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி:
இந்த சம்பவத்தில் 33 விழுக்காடு தீக்காயத்துடன் பாதிக்கப்பட்ட ரேகா, அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக ரேகாவிடம் புகார் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடிபோதை லாரி ஓட்டுனரால் நேர்ந்த அசம்பாவிதம்.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்.. NH சாலையில் பயங்கரம்.!