சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
Video: கார் விபத்தில் சிக்கி சோகம்.. 5 பேர் உடல்நசுங்கி கோர மரணம்.!!

கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் இன்று நடந்த பயங்கர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள இரத்னகிரி மாவட்டம், ஜக்புடி ஆற்றில் அதிகாலை நேரத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
உடல்நசுங்கி பலி:
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கார் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதிய 20 ரூபாய் நோட்டு வெளியீடு! பழைய 20 ரூபாய் நோட்டு செல்லுமா? செல்லாதா? ஆர்பிஐ அறிவிப்பு!
போலீசார் விசாரணை :
இவர்கள் அனைவரும் மும்பையில் இருந்து தேவ்ருக் நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து தொடர்பான வீடியோ :
Ratnagiri, Maharashtra: An accident occurred on the Mumbai-Goa Highway when a car plunged into the Jagbudi River. Five passengers lost their lives, while the driver sustained serious injuries. All the occupants were traveling from Mumbai to Devrukh pic.twitter.com/kty9tEnNM6
— IANS (@ians_india) May 19, 2025
இதையும் படிங்க: பாம்பு குட்டி போடுவதை பார்த்துள்ளீர்களா? சிலிர்க்க வைக்கும் அழகிய காணொளி....