தமிழகம்

தனியார் தொழிற்சாலை பேருந்தை நிறுத்தி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னையில் புள்ளிங்கோக்கள் அட்டகாசம்.!

Summary:

தனியார் தொழிற்சாலை பேருந்தை நிறுத்தி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னையில் புள்ளிங்கோக்கள் அட்டகாசம்.!

தொழிற்சாலை பேருந்தை இடைமறித்து 2 புள்ளிங்கோக்கள் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமம் பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்கள் பணிக்கு வந்துசெல்ல பேருந்து வசதிகள் நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், நேற்று 40 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுடன் புறப்பட்ட பேருந்து அரண்வாயல் பகுதியில் சென்றுகொண்டு இருக்கையில், பேருந்தை இடைமறித்த 2 இளைஞர்கள், பேருந்திற்குள் ஏறி பெண் பயணிகளிடம் தொல்லை கொடுத்துள்ளது. மேலும், அவதூறான பல்வேறு வார்த்தைகளை பேசி இருக்கிறது. 

இதனை பெண்மணியொருவர் வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட நிலையில், பேருந்தில் இருந்து இறங்கிய இளைஞர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 2 இளைஞர்களை கைது செய்தனர். 


Advertisement