15 வயது சிறுமியை கொன்று, உடலை ஏரியில் வீசிய புள்ளிங்கோ காதலன்.. ஊர்ஊராக உல்லாசம்; இறுதியில் கைலாசம்..!



thiruvallur-minor-girl-killed-by-love-boy-after-interco

 

பள்ளிக்கு சென்றுவந்த சிறுமியை காதலிப்பதாக உல்லாசம் அனுபவித்த இளைஞன், இறுதியில் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்த பயங்கரம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பிச்சாட்டூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம் (வயது 45). இவரின் மனைவி திலகா (வயது 37). தம்பதிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திலகா, 15 வயதுடைய மகள் உஷாவுடன் நெல்வாய் கிராமத்தில் வசித்து வருகிறார். சிறுமி உஷா பெரியபாளையம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில், கடந்த 10ம் தேதியில் வெளியே சென்ற சிறுமி உஷா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை தேடியலைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் மாணவியை தேடி வந்த நிலையில், கடந்த 23ம் தேதி கொள்ளனூர் ஏரிக்கரையில் சிறுமியின் சடலம் இருப்பதாக பாதிரிவேடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டது மாணவி உஷா என்பது அம்பலமானது. விசாரணையில், சிறுமி முக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரவீன் (வயது 19) என்ற வாலிபரை காதலித்து வந்தது உறுதியானது. 

thiruvallur

பிரவீன் தலைமறைவாகியிருந்ததால், அவனை தனிப்படை அமைத்து அதிகாரிகள் கைது செய்தனர். ப்ரவீனோடு இருந்த 17 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டான். இவர்களிடம் நடந்த விசாரணையில், "சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது அவருடன் பழக்கத்தை ஏற்படுத்திய பிரவீன், காதலிப்பதாக கூறியுள்ளான். பின்னர், திருமணம் செய்வதாக அவரிடம் அத்துமீறி இருக்கிறான். 

இதற்கிடையில் மாணவி தன்னை திருமணம் செய்துகொள்ளக்கூறி நெருக்கடி கொடுக்கவே, அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த பிரவீன் தனது நண்பரான 17 வயது சிறுவனுடன் உஷாவை தீர்த்துக்கட்டி இருக்கிறான். கடந்த 10ம் தேதி சிறுமியை தன்னுடன் அழைத்து சென்ற பிரவீன் பல இடங்களில் உல்லாசமாக இருந்துவிட்டு, கடந்த 22ம் தேதி சிறுமியின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளனர். இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.