அரசியல் தமிழகம்

சிவன் கோவிலில் சிவலிங்கத்துக்கு கற்பூர தீபம் ஏற்றி வழிபாடு செய்த திருமாவளவன்.! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

சிவலிங்கத்தை வணங்கி மனுதர்ம நூலில் பெண்களை பற்றி கூறியுள்ளதை பொதுமக்களுக்கு விளக்கும் துண்டு பிரசுரம் செய்துள்ளார் திருமாவளவன்.

மனுஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து இழிவான விதிகள் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியியிருந்தார். அவர் பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜகவினரும், சில அமைப்புகளும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுதர்ம நூலில் பெண்களை பற்றி கூறியுள்ளதை பொதுமக்களுக்கு விளக்கும் துண்டு பிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி ஆவடியை அடுத்த கண்ணபாளையம் பகுதியில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில், இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு அங்குள்ள சிவன் கோவிலில் சிவலிங்கத்துக்கு கற்பூர தீபம் ஏற்றி வழிபாடு செய்தார்.

பின்னர் மனுதர்மம் நூலில் கூறி இருந்தது தொடர்பான தனது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய சைவ தமிழ் பேரவை இயக்க தலைவி கலையரசி நடராஜனிடம் முதல் துண்டு பிரசுரத்தை வழங்கினார். இதனையடுத்து திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மனுதர்மம் நூலில் கூறி இருப்பது குறித்து நான் எப்போதோ பேசியது. அது யாருக்கும் தெரியாது. தான் கூறிய கருத்துக்கு பின்னணியில், திமுக இருப்பதாக  சனாதன சக்திகள் பரப்பி வருகின்றனர். மனுதர்ம நூலை பற்றி பேசியதற்கு நான் தான் பொறுப்பேற்க முடியும். ஆனால் தி.மு.க. சொல்லித்தான் நான் செய்வதாக சொல்வதும், இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது என தெரிவித்தார்.


Advertisement