இந்தியா

தெலங்கானா என்கவுன்ட்டர் குற்றவாளிகளின் உடல்கள் மீண்டும் பிரேத பரிசோதனை!

Summary:

thelungana encounter


தெலங்கானா என்கவுன்ட்டரில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்தது. 

இதனையடுத்து குற்றவாளி 4 பேரையும் போலீசார் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போது, குற்றவாளிகள் தப்பியோட முயன்றதால் போலீசார் அவர்களை சுட்டுக்கொன்றனர். என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாளை 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் 4 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யவும் தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் 4 பேரின் உடல்களும் நாளை காலை 9 மணியளவில் மறு பிரேத பரிசோதனையை செய்ய இருக்கின்றனர். 


 


Advertisement