நீதிபதி வீட்டிற்கு திருட சென்ற கொள்ளையன்..! ஒரே நாளில் நான்கு வீடுகளில் கொள்ளை.! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

நீதிபதி வீட்டிற்கு திருட சென்ற கொள்ளையன்..! ஒரே நாளில் நான்கு வீடுகளில் கொள்ளை.! அதிர்ச்சியில் பொதுமக்கள்!


theft-in-salem

சேலம் மாவட்டத்தில் நீதிபதி வீடு உட்பட ஒரே நாளில் நான்கு வீடுகளில் கொள்ளையடிக்க மர்ம நபர்கள் புகுந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் நகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருபவர் வீட்டிற்கு வந்த திருடன் பின்பக்க கதவை உடைக்க முயன்றுள்ளான். இந்த சத்தம் கேட்டு வீட்டின் வெளிப்புற மின்விளக்குகளை வீட்டின் உள்ளே இருந்தவர்கள் போட்டதும், திருடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

இதனையடுத்து நீதிமன்றம் அருகே வசிக்கும் அர்ஜுனன் வீட்டிற்குள் புகுந்த அந்த திருடன், அர்ஜுனன் மனைவி அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றுள்ளார். அந்த பெண், சத்தம்போட்டு கத்துவதற்குள் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

இதனையடுத்து அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிற்கு நான்கு பேர் கொண்ட கும்பல் திருட சென்றுள்ளனர். ஆனால், அக்கம்பக்கம் இருப்பவர்கள் சத்தம்போட்டதால் அங்கிருந்து அனைவரும் தப்பி சென்றுள்ளனர். அதேபோல் பக்கத்துக்கு பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.