"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சாராய வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது கள்ளச்சந்தையில் பல இடங்களில் மது விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், சாராய விற்பனை அதிகரித்திருப்பதுடன், வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. மேலும் பல பகுதிகளில் சாராய ஊறல் போட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்து அழித்துவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்தே கள்ளச்சந்தையில் மது விற்பனையாவதையும், சாராய ஊறல் போட்டிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து அழித்துவருகின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள கருக்காகுறிச்சி தெற்குதெரு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த 21- ஆம் தேதி தைலமரக்காட்டில் சாராயம் காய்ச்சி விற்றதாக போலீசார் கைது செய்து அறந்தாங்கி கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து கடந்த 1-ஆம் தேதி புதுக்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்ட கண்ணன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கண்ணன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து கண்ணனை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.