நல்லா இருந்த வீட்டின் முன்பு 4 தறுதலைகள் செய்த காரியத்தால் நிகழ்ந்த சோகம்..!The man who reprimanded the youth for loudly speaking obscenities was killed

தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (61). இவர் சொந்தமாக மரக்கடை நடத்திவந்தார். நேற்று இரவு அவருடைய வீட்டுக்கு அருகே, அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுகுமார் (19), அமராவதி பள்ளி தெருவை சேர்ந்த கபில் (21), சேவாக் (19) மற்றும் அஜித் (20) ஆகியோர் நின்று சத்தமாக பேசிக் கொண்டு இருந்தனர்.

அந்த வாலிபர்கள் ஜாலியாக பேசுவதாக நினைத்து ஆபாச வார்த்தைகளை அதிகம் பேசியதுடன் சத்தமாகவும் பேசியதாக கூறப்படுகிறது, இதன் காரணமாக பாண்டியன் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இளைஞர்கள்  4 பேரும் சேர்ந்து பாண்டியனை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த சேவாக்கின் தந்தை சந்திரகுமார் என்பவரும் பாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகறாறு நடந்த இடத்திற்கு வந்ததால் அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து சுகுமார், கபில், சேவாக் மற்றும் அஜித் ஆகிய 4 பேரையும் இன்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சந்திரகுமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.