அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிமுக அமைச்சர்.! அதிர்ச்சி சம்பவம்.!

உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 1392 கொடையாளர்களிடம் இருந்து (donors) 1245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் கடந்த மார்ச் முதல் 27 டோனர்ஸ்களிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
இதற்காக தமிழக சுகாதரத்துறையை கவுரவிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் காணொளி வாயிலாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கினார். அந்த காணொளி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
நேற்று காலை 8:45 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்ததாக அறிவித்தது. இதையடுத்து, உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு திரும்பினார். அங்கிருந்தபடியே காணொளி காட்சி மூலமாக மத்திய அமைச்சரிடம் விருதை பெற்றுக்கொண்டார். இந்தநிலையில் அமைச்சர் செல்லவிருந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
நேற்று காலை 8:15 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த இண்டிகோ விமானம். 8:45க்கு சென்னை புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தின் விமானிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து விமானி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விமானம் புறப்படுவதற்கு முன்னரே விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் முன்கூட்டியே அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த அமைச்சர் உள்ளிட்ட 42 பயணிகள் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.