அதுவும் போச்சா.. தமிழகத்தில் இருந்த ஒரு பச்சைக்கும் ஆப்பு வைத்த கொரோனா! கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பதிவு!

அதுவும் போச்சா.. தமிழகத்தில் இருந்த ஒரு பச்சைக்கும் ஆப்பு வைத்த கொரோனா! கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பதிவு!



the-first-corona-positive-at-krishnagiri

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாததால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல் முறையாக ஒரு கொரோனா பதிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட மாவட்ட வாரியான வகைப்படுத்தலில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிகப்பு, 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மற்றும் ஒரு மாவட்டம் பச்சை என அறிவிக்கப்பட்டது. அந்த ஒரு மாவட்டம் நேற்று வரை கொரோனா பாதிப்பே இல்லாத கிருஷ்ணகிரி தான்.

Krishnagiri

பச்சை மண்டல மாவட்டங்களில் முழு ஊரடங்கிலிருந்து ஒருசில விதிமுறைகளை தளர்த்தலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மட்டும் சில விலக்குகள் அளிக்கப்படும் என மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இன்று ஒரு கொரோனா நோயாளி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 67 வயதான அந்த நபர் சமீபத்தில் ஆந்திர பிரதேசம் மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்தவர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.