மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்.! மாறி கொடுக்கப்பட்ட சடலம்.! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்.! மாறி கொடுக்கப்பட்ட சடலம்.! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!



The corpse was dug up and handed over to relatives

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செல்வராஜ் என்ற முதியவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த 7-ஆம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சடலத்தை பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் அவரது உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து செல்வராஜின் உறவினர்கள் சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் செல்வராஜின் சடலம் காணாமல் போயுள்ளது. இதனையடுத்து செல்வராஜின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தங்கமணி என்பவரது சடலத்திற்கு பதிலாக செல்வராஜின் சடலத்தை தவறுதலாக வழங்கியதும் அதை அறியாமல் தங்கமணியின் உறவினர்கள் செல்வராஜின் சடலத்தை வாங்கிச் சென்று அடக்கம் செய்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து தங்கமணியின் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்ட செல்வராஜின் சடலத்தை தோண்டி எடுக்க சென்றபோது தங்கமணியின் உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு புதைத்கப்பட்ட இடத்தில் இருந்து உடலை எடுத்து செல்வராஜின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தங்கமணியின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.