காட்டிற்குச் சென்ற மூதாட்டி கொடூர படுகொலை... காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

கரூர் அருகே வேப்பம்பழம் பறிக்கச் சென்ற மூதாட்டி நகைகளுக்காக கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் மத்தகிரி ஊராட்சி பள்ளிக் கவுண்டர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மனைவி கன்னியம்மாள். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் கன்னியம்மாள் தனது சகோதரி வெள்ளையம்மாவை முத்துசாமிக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர் அனைவருக்கும் திருமணமான நிலையில் தனியாக வசித்து வருகின்றனர். முத்துசாமி சில காலங்களுக்கு முன்பு இருந்து விட்டதால் கன்னியம்மாள் தனது சகோதரி வெள்ளையம்மாள் மற்றும் அவரது மகன் விஸ்வநாதன் ஆகியோருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார் .
கன்னியம்மாள் வேப்பம் பழங்களை பறிப்பதற்காக தரிசு காட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு சாப்பிட திரும்பி வந்தார். சாப்பிட்டு முடித்த பின் மீண்டும் வேப்பம்பழங்களை பறிப்பதற்காக காட்டிற்கு சென்று இருக்கிறார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடிய போது பரிசு காட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் படமாக கிடந்தார். மேலும் அவரது நகைகளும் காணாமல் போய் இருந்தது .
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கன்னியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் கன்னியம்மாளின் நகைகளுக்காக அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. கொலையாளிகள் அவரை கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் காதல் அணிந்திருந்த ஒரு பவுன் தோடு ஆகியவற்றை பறித்து சென்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் .