மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்.!

மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்.!


the-auto-driver-who-was-hacked-to-death-by-a-mysterious

நெல்லை மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்சேவல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். 63 வயதான இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவரை வழிமறித்த மர்மக் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.

tamilnaduஇந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

tamilnaduசம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.